வேளாண் செய்திகள்

நடவு முறை துவரை சாகுபடி
ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது. நடைமுறை சாகுபடியில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நேரடி விதைப்பாக உழவு சால்களில் விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் துவரையை நாற்றுவிட்டு நடவு செய்து நல்ல விளைச்சல் கண்டு வருகின்றனர்.

முக்கிய நடவுமுறை சாகுபடி நுட்பங்கள்:

துவரை நடவு செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன் நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் இடப்படுகிறது.

இறவை மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5′ x 3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6′ x 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்) குழிகள் எடுக்கப்படுகின்றன.

நாற்றங்காலுக்கு 1 கிலோ விதை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கிலோ விதையை 0.2 சதம் கால்சியம் குளோரைடு (20 கிராம்/லிட்டர்) கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் 7 மணி நேரம் நிழலில் உலர்த்தப்படுகிறது. இவ்விதையினை 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள், டிரைகோடெர்மா (10 கிராம்/ கிலோ) பூஞ்சாணத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்யப்பட்டு விதைக்கப் படுகிறது.

மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6” x 4”) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப் படுகின்றன.

பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க 3-4 துளைகள் போடப்படுகின்றன. பின் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப் படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்வது நல்லது.

நடவுமுறை:

நாற்றுக்களை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்படுகின்றன.

ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை போன்ற பயிர்களை விதைத்து பிறகு நடவு மேற்கொள்ளப்படுகின்றது.

நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப் படுகிறது. பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப 3-4 முறை பாசனம் செய்யப்படுகின்றது.

நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்கப்படுகிறது. நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்து பராமரிக்கப்படுகிறது.

உர நிர்வாகம்:

நடவு நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 10:23:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கும் வகையில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரங்களும் செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.

நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ் ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.

சோள விதைகளை துவரை வயலில் விதைத்து பறவைகள் அமர்வதற்கு ஏதுவாக வழிவகை செய்வது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கிறது.

தினமலர் தகவல்: பா.கலைச்செல்வன், செ.தே.சிவகுமார், விரிவாக்கக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1522

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம், குமிழ், மலைவேம்பு
சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.

சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் செழிப்புடன் வளரும் தன்மை கொண்டது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, கோயில் வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதுடன் 12 ஆண்டுகளுக்குப் பின் பலகோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.

விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 சந்தன மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற வகை மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே இரண்டு சந்தன மரங்களின் மையப்பகுதியில் குமிழ், மலைவேம்பு, மகோகனி, சவுக்கு, செடிமுருங்கை என வேறு வகையான மரங்களை ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்க முடியும். தென்னை, பெருநெல்லி, சப்போட்டா, பேரீட்சை, முந்திரி, மா என பல வகையான தோப்புகளில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 15 ஆண்டுகள் வளர்ந்த ஒரு சந்தன மரத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். ஊடுபயிராக வளர்க்கப்படும் மரங்களின் மூலம் தனி வருமானம் பெறலாம்.

எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் சந்தனம் வளர்ப்போம். இந்நாள் இதனை செய்திடுவோம். 2020ல் அதனை நறுமணமாய்ப் பெற்றிடுவோம். ஒரு மனதாய் வளர்த்திடுவோம் சந்தனத்தை, சுகவனமாய் அமைத்திடுவோம்… இந்தியத் திருநிலத்தை, கலாமின் கனவை நனவாக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமியாக்குவோம்.

சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக், சிவப்பு சந்தனம், அசோலா மற்றும் பலவகையான வன மரக்கன்றுகளும், விதைகளும் வளர்ப்பு முறை ஆலோசனைகளும் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.

தினமலரில்  ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு
தண்ணீர் வசதியுடன் கூடிய புஞ்செய் நிலங்களில் பொருளாதார ரீதியாக அதிக வருமானத்தை தரக்கூடிய வீரிய ஒட்டுரக

கத்திரி

வெண்டை

தக்காளி

மிளகாய்

பிரெஞ்ச் பீன்ஸ்

முட்டைகோஸ்

காலிபிளவர்

போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவது அவசியமானது என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

குறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, வெண்டை பயிர்களில் விவசாயிகள் வழக்கமாக சாகுபடி செய்யும் உள்ளூர் ரகங்களை தவிர்த்து வீரிய ஒட்டுரக காய்கறிகளின் விதைகளை பயிரிடுவதால் கூடுதலாக மகசூல் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட நிழல்வலை கூடாரங்களிலோ அல்லது சூரிய வெளிச்சத்துடன் கூடிய சிறிய நிழல் கொட்டகைகள் அமைத்தோ அவைகளில் குழித்தட்டு முறையில் நாற்றுக்களை பராமரித்து பருவநிலை காரணமாக நாற்றுக்களுக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்த்து வாளிப்பான காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து பயன் பெறலாம்.

நாற்றங்கால்களை குழித்தட்டு முறையில் பராமரிப்பது எப்படி என்பது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முனைவர் க. வீராசாமி கூறியது:

குழித்தட்டுகளை தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், மணல் மூலம் தயார் செய்த கலவை கொண்டு நிரப்ப வேண்டும்.

தென்னை நார்க்கழிவு குழி நிரப்பு பொருள் நிரப்பிய 10 தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குழியிலும் 0.5 செ.மீ. ஆழத்துக்கு சுண்டு விரல் மூலம் குழி ஏற்படுத்தி தட்டுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழிக்கும் ஒரு விதை வீதம் விதைப்பு செய்து செடி வளர்பொருள் (தென்னை நார்க்கழிவு) கொண்டு மூட வேண்டும்.

தென்னை நார்க்கழிவினை 300, 400 சதவீத ஈரப்பத நிலையில் உபயோகிக்கும்போது தட்டுக்களுக்கு விதைப்புக்கு முன்பாகவும், பின்னரும் நீர்பாய்ச்ச தேவையில்லை.

விதைப்பு செய்த தட்டுகளை 10 தட்டுகள் கொண்ட அடுக்குகளாக ஒன்றன் மீது ஒன்றாக பயிறுக்கேற்றவாறு 3 முதல் 6 நாள்களுக்கு அடுக்கி வைத்து அவற்றின் மேல் பாலித்தீன் தாள் கொண்டு காற்றோட்டமாக மூட வேண்டும். இது தட்டுகளில் உள்ள ஈரப்பதத்தை விதைகள் முளைக்கும் வரை நிலை நிறுத்துகிறது. விதைகள் முளைத்தவுடன் செடிகள் வளைந்து போவதைத் தவிர்க்க முளைப்பு கண்டுள்ள தட்டுகளை நிழல் வலைக் கூடாரங்களுக்கு மாற்றி சிறு வலைக் கூடாரங்களில் பாலித்தீன் தாள் மூடாக்கு அமைத்து பராமரிக்க வேண்டும்.

பராமரிப்பு

தினமும் தட்டுகளில் உள்ள ஈரப்பத நிலைக்கு ஏற்றவாறு பூவாளி மூலம் தட்டுகளுக்கு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கவும், பயிர்சத்துகள் கரைந்து வீணாவதை தவிர்க்க அதிக நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.

முளைப்பு கண்டுள்ள தட்டுகளுக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 0.2 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதம் மருந்து கொண்டு பயிர் பாதுகாப்பு செய்து நாற்றுகள் மடிவதை தவிர்க்கவும்.

நாற்றுகள் வெளுப்பாக தென்பட்டால் 19:19:19 நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் (சிறிய டீ ஸ்பூன் அளவு) என்ற அளவில் கலந்து நாற்றுவிட்ட 12 மற்றும் 20-ம் நாள்களில் நாற்றுகளின் மேல் தெளிப்பு செய்து வாளிப்பான நாற்றுக்களாக பராமரிக்கலாம்.

நாற்றுக்களை மழையிலிருந்து பாதுகாக்க, சிறுவலைக் கூடாரங்களை அமைத்து அவைகளின் மேல் பாலித்தீன் மூடாக்கு அமைத்து பராமரிக்கலாம். நடவுக்கு முன்பாக நிழல் மற்றும் நீர்ப்பாசன அளவை குறைத்து நாற்றுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

விதைகள் முளைத்த 7, 10 நாள்களில் இமிடாகுளோபிரிட் மருந்து லிட்டருக்கு 0.2 மி.லி. வீதம் நீரில் கலந்து தெளிக்கவும். பின்னர் நடவுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தெளித்தும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என்றார் வீராசாமி.

தினமணி தகவல்

வேலூர் மாவட்டத்தில் பப்பாளி மாவுப் பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி அறிமுகம்
பப்பாளி மாவுப் பூச்சியை அழிக்கவல்ல உயிரிகொல்லியான “அசிரோபேகஸ் பப்பாயே’ என்ற ஒட்டுண்ணி காட்பாடியை அடுத்த சென்னாங்குப்பம் கிராமத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் இந்த ஒட்டுண்ணிகளை ஆட்சியர் செ. ராஜேந்திரன் பரவ விட்டார்.

மரவள்ளி

மல்பெரி

பருத்தி

பப்பாளி

காய்கறி மற்றும்

செம்பருத்தி

உள்ளிட்ட 55 வகையான பயிர்களில் பப்பாளி மாவுப் பூச்சி காணப்படுகிறது.

பயிர்களை முழுமையாக சேதப்படுத்தும் இந்த பூச்சியை ரசாயன பூச்சிச்கொல்லிகள் மூலம் அழிக்கமுடியவில்லை. இந்நிலையில் உயிரி பூச்சிக்கொல்லி ஒன்றின் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தை தற்போது கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் அறிமுகம் செய்து வருகிறது.

உயிரி தொழில்நுட்பம்

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இயக்குநர் (பயிர் பாதுகாப்பு) ஏ.ஐ. ஜோனாதன் பேசியது:

பப்பாளி மாவுப்பூச்சி 2008-ம் ஆண்டில் கோவை பகுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இப்பூச்சி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து வேகமாக பரவி வருகிறது.

இவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தமிழகத்தில் அனைத்து ஆராய்ச்சி நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக உயிரியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இப்பூச்சிகளை அழிக்க முடியும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.

ஒரு லட்சம் குப்பிகள்

அதையடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் ப. முருகேச பூபதி முயற்சி மேற்கொண்டு, மத்திய அரசு மூலம் அமெரிக்காவில் இருந்து 3 வகையான ஒட்டுண்ணிகளை வரவழைத்தார்.

நமது சீதோஷ்ண நிலையை தாக்குப் பிடிக்கும் அசிரோபேகஸ் பப்பாயே ஒட்டுண்ணி தேர்வு செய்யப்பட்டு பல்கலைக் கழகத்தின் 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 14 வேளாண் அறிவியல் மையங்களில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சம் குப்பிகளில் இவை அனைத்து மாவட்டங்களிலும் பரவ விடப்படுகின்றன.

மாவுப் பூச்சியின் தாக்குதல் கோடையில் அதிகரிக்கும். அதனால் இன்னும் 4 மாத காலத்திற்குள் மாவுப் பூச்சிகளை ஒட்டுண்ணிகள் முழுமையாக கட்டுப்படுத்தி விடும் என்றார் ஜோனாதன்.

ரூ.60 கோடி சேமிப்பு

பல்கலைக் கழக பதிவாளர் க. சுப்பையன் பேசும்போது, இந்த ஒட்டுண்ணியை கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பயன்படுத்தியதன் மூலம் சுமார் ரூ.60 கோடிக்கான பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிடைக்கிறது என்றார்.

மாசிப்பட்ட பருத்தி சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…
கோடைப்பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் அதிக மகசூல் பெற கீழ்க்காணும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம வயதுள்ள ரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும்.

இயன்றவரை பூச்சிநோய் தாங்கி வளரவல்ல எஸ்விபிஆர் 2 ரகத்தைத் தேர்ந்தெடுத்து பயிரிட வேண்டும்.

சாணிப்பால் கொண்டு விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும்.

பின் விதைப்பதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் பயன் படுத்தி விதைநேர்த்தி செய்யவும்.

காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் / வரிசைகள் அமைத்து விதைத்தால் மருந்தடிக்கும் போது மருந்துக் கலவை வீணாகாமல் தடுக்க உதவும்.

வயலைச் சுற்றிலும் உள்ள செடிகள், களைகளை (பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும்) அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்.

தொழு உரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய் (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன்வண்டு, தரைக்கூன் வண்டு, வேர்ப்புழு) தாக்குதலை குறைக்கும்.

விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (ஏக்கருக்கு ஒரு கிலோ) இடுவது வேரழுகல், வாடல் நோய் தாக்குதலைக் குறைக்கும்.

நட்ட 20 மற்றும் 30ம் நாள் வேப்பெண்ணெய் 1 சதம் கரைசல் தூரில் ஊற்றுதல் தண்டுக்கூன் வண்டு தாக்குதலைக் குறைக்கும்.

ஊடுபயிராக வாய்க்கால்கள் மற்றும் பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணைபுரியும்.

மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடுபயிராக மக்காச் சோளம், உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஓரப் பயிராக சோளம், ஆமணக்கு, சூரியகாந்தி பயிரிட வேண்டும். * இரட்டை வரிசையில் பருத்தியை பயிரிட்டு இடைவெளியில் ஒரு வரிசை உளுந்து அல்லது சீனி அவரை ஊடுபயிராக பயிரிடலாம்.

வயலைச் சுற்றி அரண் போன்று சோளம் நெருக்கமாக (உயரமாக வளரும் ரகம்) வளர்க்க வேண்டும். (தத்துப்பூச்சி, இலைப்பேன்கள், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி மற்றும் காய்ப்புழுவின் அந்துகள் வயலினுள் நுழைவதைத் தடுக்க).

சீனி அவரை ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழு தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறுவகை ஊடுபயிர்கள் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது.

வயலைச் சுற்றி ஆமணக்கு பயிரிட்டு புரடீனியாப் புழு முட்டைகளைச் சேகரித்து அழிக்கலாம். ஆமணக்கு புரடீனியா புழு தாய்ப்பூச்சிகளை முட்டையிட கவர்ந்திழுக்கும்.

வெண்டை, ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி பயிர்கள் முறையே புள்ளிக்காய்ப்புழு, புரடீனியா மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலைக் கவர்ந்திழுக்கும். அப்பூச்சிகளை அங்கேயே கட்டுப்படுத்தி விடவேண்டும்.

ஊடுபயிராக வாய்க்கால்களில் மக்காச்சோளம் பயிரிட கிரைசோபா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு துணை செய்யும்.

வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கே வெண்டை பயிரிட்டு சொத்தைக் காய்களைப் பறித்து அகற்ற வேண்டும்.

தினமலர் தகவல் – ந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்
ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்). சுட்டிக்கு இங்கே.

பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.

திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.

பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்

நெல்

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 செண்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவவும்

2 லி பஞ்சகவ்யத்துடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15ஆம் நாள் தெளிக்கவும்

விதைத்ததில் இருந்து 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவும்

நடவில் இருந்து 30ஆம் நாள் – நாலரை லிட்டர் பஞ்ச கவ்யத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்

கழிவுநீர் குட்டை வழி பாசனம் செய்தால் வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களும் தேவையில்லை. வாரம் ஒரு முறை பாய்ச்சவும்

சாதாரண நடவு முறையில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி

மதிப்புக் கூட்டி அரிசியாக விற்பனை. தவிடு கால்நடைத் தீவனமாகிறது

பசு மற்றும் எருமை

ஆடு மாடுகளுக்கு தினமும் 5 மணிநேர மேய்ச்சல்

மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல் மற்றும் தீவனப்புல்

30 சதம் அரிசித் தவிடு – 20 சதம் புண்ணாக்கு – 30 சதம் சோள குருணை – 10 சதம் பாசிப்பருப்பு உமி – 10 சதம் உளுந்து உமி அகியவற்றை ஒன்றாகக் கலந்து லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் அடர் தீவனம் தயாரிக்கவேண்டும்

ஒரு மாட்டுக்கு காலை ஒண்ணே கால் கிலோ – மாலை ஒண்ணே கால் கிலோ

ஆடுகளுக்கு தனியே தீவனம் தேவையில்லை.

கோழிகளுக்கும் தேவையில்லை. குப்பை கூளங்கள் மற்றும் சிதறிய தீவனங்களும் இவைகளுக்குப் போதும்

பால் விற்பனையுடன் சாணத்தையும் சாணம் மற்றும் கழிவு நீர் கலந்து பஞ்ச கவ்யத்தையும் விற்றுவிடுகிறார். நெல்லுக்குக் கூட தொழுஉரம் போடுவதில்லை என்கிறார்.

சாணத்தின் ஒரு பகுதி இவருடைய பஞ்சகவ்ய தேவைக்கும் மீன் குட்டைக்கும் போய்விடுகிறது

மீன் குட்டைக்கும் வயலுக்கும் நீர் கழிவு நீர் குட்டையிலிருந்தே போகிறது.

கோழி குஞ்சுகள் மற்றும் கோழி விற்பனை, மீன் குளத்தின் மீன் விற்பனை என்று இவரது வருடாந்திர கல்லா லாபம் – என்னுடைய சம்பளத்தை விட அதிகம்

இயற்கை வழி வேளாண்மை என்பதால் நிறைய மண்புழுக்கள் தோன்றுகின்றன. வேர் பகுதி பூச்சிகளைத் தின்று அழிக்கின்றன.

கொக்குகள் வழி பயிரின் நடுப்பகுதி மேல்பகுதி பூச்சிகள் சம்ஹாரமடைகின்றன. அத்துடன் மாடுகளிடம் உள்ள ஒட்டுண்ணிகளைக் காலி செய்து விடுகின்றன.

பேன்கள், உன்னிகள், ஈக்கள் இல்லாமல் இருந்தாலே கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்

விவசாயம் என்பது அனைவருக்கும் பார்முலா மாதிரி அமைவதில்லை. என்றாலும் இவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் சமயோஜிதம் அவருக்கு பயன்தந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுமா?
தமிழகத்தில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயம் தற்போது வெகுவாக அழிந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்ற விவசாயம், இப்போது 48 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை, நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து வருகிறது. உர விலை உயர்வு, வேலையாள் பற்றாக்குறையால் விவசாய நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன.

எஞ்சியிருக்கும் நிலங்களில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள், இப்போது கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இதற்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் முக்கியக் காரணம்.

கிராம ஏழைகளின் வறுமையைப் போக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், இந்தத் திட்டமானது விவசாயப் பணிகள் நடைபெறும் கால கட்டங்களிலும் செயல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல கிராமங்களில் இயந்திரங்களைக் கொண்டு பணிகள் நடைபெற்றன. மேலும் சில கிராமங்களில் விவசாயமே மேற்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் பயனடைந்தாலும், விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காததால் நிகழாண்டில் நடவுப் பணிக்கு இயந்திரங்கள், அதிக கூலி கொடுத்து வெளியூர்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தோம். இந்நிலை நீடித்தால், வருங்காலங்களில் விவசாய நிலங்களை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

எனவே, விவசாயப் பணிகள் நடைபெறும் காலகட்டம் தவிர, மற்ற காலங்களில் வேலை உறுதித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி
குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர்.

அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிட ஆகும் முதலீடு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நிலத்தை உழுது பண்படுத்திய பின்பு 6-8 அடி அகல இடைவெளியில் கால்வாய் வெட்டிய பின் 3 அடி இடைவெளி விட்டு குழிகள் தோண்ட வேண்டும்.

இந்த குழியில் மக்கிய தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு நன்கு கலக்கிய பின்பு ஒரு குழிக்கு 3-4 விதைகளை இட்டு குழிகளை மூடி விட வேண்டும்.

விதை தூவிய 5-வது நாள் விதை முளைத்தல் நிகழும். இதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15-ம் நாளுக்கு பிறகு நிலத்தில் முளைத்துள்ள களைகளை அகற்ற வேண்டும். இந்நிலையில் பூச்சிமருந்து தெளித்து பயிர்களை காக்க வேண்டியது அவசியமாகும்.

30-35-ம் நாளில் செடியில் பூப்பூக்க தொடங்கி அதை தொடர்ந்து காய் காய்த்து பெரிதாக தொடங்கும். பயிரிடப்பட்ட 65-75 நாள்களில் தர்ப்பூசணி நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருக்கும்.

இப்படி இரண்டு மாத கால பராமரிப்பில் தர்ப்பூசணி சாகுபடி செய்யும் போது அதிகபட்ச லாபத்தை விவசாயிகள் அடைந்து பயனடையலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல பராமரிப்புக்கு தக்கவாறு 10 டன் தர்ப்பூசணி வரை விளைச்சலாக வாய்ப்புண்டு. தற்சமயம் ஒரு டன் தர்ப்பூசணி ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகிற நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் 10 டன் தர்ப்பூசணியை விற்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் வரை விற்கலாம்.

செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் லாபத்தை 2 மாதங்களில் விவசாயிகள் பெற்று லாபம் பெற வாய்ப்பு உள்ளதால் தர்ப்பூசணி ஒரு லாபகரமான விவசாயப் பயிர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை 50 சதவீதம் மானியத்துடன் தோட்டக்கலைத் துறை தருகிறது.

அதே போல தோட்டக்கலைத் துறையோடு சேர்ந்து தேசிய வேளாண் நிறுவனமும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு கருவிகள், பாஸ்வோபாக்டீரியா, சூடாமோனாஸ் போன்ற உயிரி உரங்களை பெற்று தருகின்றனர்.

கூலியாள்கள் கிடைக்க சிரமமாய் இருக்கும் இது போன்ற நாள்களில் குறைந்த ஆட்களைக் கொண்டு தோட்டப் பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது எளிதாக உள்ளதாலும் அதில் நிறைய லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை என்று பேசுபவர்களுக்கான தொழில்நுட்பம்
வேரைப் பாதுகாத்தால் விளைச்சல் அதிகரிக்கும்

விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும்.

மனிதனுக்கு இதயம், நுரையீரல் எப்படி முக்கியமோ பயிருக்கு அந்த அளவு வேர் முக்கியம். வேர் திடமாக இருந்தால்தான் பயிர் செழித்து வளரும்.

மனிதன் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்ப்பன்- டை-ஆக்ஸைடை வெளியிடுகிறான். பயிர்களின் வேர் கார்ப்பன்-டை- ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வேர் வலிமையாக இருந்தால்தான் சுவாசிக்கும் திறன் நன்றாக இருக்கும்.

வேரைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

வேர் வலிமையாக இருக்க அங்ககப் பொருள்களை அதிகமாகப் பயிர்களில் பயன்படுத்த வேண்டும். வேர் சுவாசம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வேர் கிளைக்கும். அதிகமான கிளைப்பு காரணமாக மகசூல் அதிகரிக்கும்.

ஆடி, தை ஆகிய 2 பட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகளுக்குத் தொழு உரத்துக்குப் பதிலாக தேங்காய்நார் கழிவு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அங்ககக் கரிமசத்து இதில் அதிகமாக இருக்கிறது. இந்த உரத்தைப் பயன்படுத்தினால் வேர் திடமாக இருக்கும்.

கிளைப்பு நிறைய வரும். சுவாசம் நன்றாக இருக்கும். ஈரம் காக்கும் தன்மையும் கூடவே கைக்கூடும். மேலும் நன்மை தரும் நுண்கிருமிகள் வேர்ப்பகுதியில் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரைவகைகள் மற்றும் தோட்டப் பயிர்களான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு தேங்காய் நார் உரத்தைப் பயன்படுத்தலாம்.

எந்தப் பயிராக இருந்தாலும் வேர்ப் பகுதியில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். வேப்பம்புண்ணாக்கில் அசாடி ரக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கசப்புத்தன்மை இருக்கிறது.

இத்தன்மை காரணமாக வேரில் அழுகல் நோய், வேர் வாடல் நோய், வேரைத் தாக்கும் நூல் புழு வராமல் தடுக்க முடியும். இந்தப் புண்ணாக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை விரட்டி வேரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

தரிசு களர் உவர் நிலங்களை மேம்படுத்தும் வழிமுறைகள்
களர் உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். நுண்ணுயிர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால்தான் இடப்படும் கம்போஸ்ட் மற்றும் தழை உரங்கள் சிதைக்கப்பட்டு வளரும் பயிர்களுக்கு கிடைக்கும்.

மேலும், இம் மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பயிர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருத்தல் வேண்டும்.

களர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடவு செய்த 10 நாள்களில் நீலப்பச்சைப்பாசி என்னும் ஒரு வகைப் பாசியை இடுவதால் நெல் பயிர் நன்கு வளரும்.  இப் பாசி களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. மண்ணின் இயக்கம்  (டஏ) 7.5 முதல் 10 வரை உள்ள நிலங்களில் இது நன்கு வளரும்.  இந்தப் பாசியை மண்ணில் இடும்போது மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இப் பாசி ஆக்சாலிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலத்தை வெளியிடுகிறது.

இந்த அமிலம் மண்ணின் காரத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ நீல பச்சைப்பாசியை இடுவதால், அது 10 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பித்து, அதில் வளரும் நெல் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம்.

தினமணி தகவல் – திரு சரவணன், வேளாண்மை அலுவலர், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், கோவில்பட்டி